- செய்திகள், மாவட்டச்செய்திகள்

மக்கள் நலக்கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி, மார்ச் 28:-
மக்கள் நலக்கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாராயணசாமி கூறினார்.
பொதுமக்களிடம் வரவேற்பு
புதுச்சேரி அரியூர் பகுதியிலிருந்து என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ரமேஷ் தலைமையில் பலர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அப்போது அவர்களை  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான நாராயணசாமி வரவேற்றார். இதைத்தொடர்ந்து, அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதோடு மட்டுமல்லாமல் என்.ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். ரங்கசாமி கடந்த தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. வாட் வரி உயர்வால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த ஆட்சியில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஏ.எப்.டி., பாரதி உள்ளிட்ட பஞ்சாலைகள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
ரூ.6500 கோடி கடன்
ஆட்சிக்கு வந்தால் புதுவை அரசு கடன் ரூ.6500 கோடி தள்ளுபடி செய்வேன் என்று ரங்கசாமி கூறிய வாக்குறுதியை நிறைவேறவில்லை. மக்கள் நலக்கூட்டணியோடு விஜயகாந்த் கூட்டணி வைத்துள்ளார். இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த கூட்டணியால் புதுவையில் காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு கூறினார்.

Leave a Reply