- சென்னை, செய்திகள்

மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வேண்டும்

மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாநாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, பல்வேறு கட்சித் தலைவர்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-முதல்வர் வாழ்த்துவேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளில் மக்கள் தங்கள் இல்லங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, அரளி மலர், வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படைத்து, பக்தியுடன் வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள்.

விநாயகப் பெருமானின் திருவருளால், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply