- செய்திகள், மாநிலச்செய்திகள்

மகாத்மா காந்தியின் பேத்திக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

புதுடெல்லி, ஏப்.22-

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பேத்தி தாரா காந்தி உலக அமைதி, ஒற்றுமை, கலாசாரம், கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஆற்றிய அரும்பெரும் சேவையை பாராட்டி அவருக்கு பிரான்ஸ் நாட்டு அரசு தனது நாட்டின் உயரிய கலை இலக்கிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

காந்தியடிகளின் பேத்தி

தேசதந்தை மகாத்மா காந்தியடிகளின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்ஜி. 82 வயதுடைய இவர் காந்திஜியைப் போல பண்புகள் நிறைந்தவர். அன்பு மற்றும் பொறுமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.

தனது பாட்டியான கஸ்தூரிபாய் காந்தியின்  தேசிய நினைவு அறக்கட்டளை நிறுவனத்தில்  கடந்த 28 ஆண்டுகளாக பணியாற்றி  வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் ெபண்கள் மற்றும் குழந்தைகளின்  முன்னேற்றத்துக்கு தொண்டாற்றி வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் தூதர் வழங்கினார்

விருதை பெற்றுக்கொண்ட காந்தியின் பேத்தி தாராகாந்தி பட்டாச்சார்ஜி கூறியதாவது-

காந்தியின் தைரியத்தை கற்றுக்கொள்ளவேண்டிய நேரம் வந்துள்ளது.   காந்திஜியின் துணிச்சலான செயல்கள் வித்தியாசமானதாகும். நான் அவரது அறையை பற்றி நினைத்துப் பார்க்கிறேன். அவரது அறை எ்ப்போதும் திறந்தே இருக்கும். அவரை பார்த்துவிட்டு திரும்பும் அரசியல்வாதிகள் காந்தியின் கருத்து ஏற்க கூடியதாக இல்லை என்றே கூறுவார்கள். காந்தியிடம் உள்ள தைரியம் இன்று நாட்டுக்கு தேவை.

இவ்வாறு காந்தியின் பேத்தி தாராகாந்தி பட்டார்ஜி கூறினார்.
தாராகாந்தியின் தந்தை மறைந்த தேவதாஸ் காந்தி. தாயார் மறைந்த லட்சுமி தேவதாஸ் காந்தி (ராஜாஜியின் மகள்) இந்த உறவு முறையில் தாராகாந்தி மூதறிஞர் ராஜாஜியின் பேத்தியும் ஆவார். இவரது கணவர் ஜோதி பிரசாத் பட்டாச்சார்ஜி மறைந்துவிட்டார். மேலும் தாராகாந்தி முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் சகோதரி  என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply