- செய்திகள், விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 4-வது முறையாக இறுதிச்சுற்றில் ஆஸி.

புதுடெல்லி, மார்ச் 31:-

புதுடெல்லியில் நேற்று நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நடப்பும் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதிபெற்றுள்ளது. ஏற்கெனவே கடந்த 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்த ஆண்டும் பைனலுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லியில் உள்ள பெரோஷோ கோட்லா அரங்கில் இந்த ஆட்டம் நடந்தது. டாஸ்வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் எட்வார்ட்ஸ் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் லேனிங் 55 ரன்கள் சேர்த்தார்.

133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே சேர்த்து 5 ரன்களில் தோல்வி கண்டது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் எட்வர்ட்(31), பீமான்ட்(32) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 67 சேர்த்து சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால், பின்னாள் களம் இறங்கிய வீராங்கனை பயன்படுத்த தவறியதால் தோல்வி கண்டது. ஆஸ்திரேலியத் தரப்பில் அதிகபட்சமாக ஸ்கட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Leave a Reply