- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் மே.இ.தீவுகள்-நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை

மும்பை, மார்ச் 31:-

மும்பையில் இன்று நடக்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிந் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

சர்வதேச தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள நியூசிலாந்து மகளிர் அணி இதுவரை 2009 மற்றும் 2010-ம் ஆண்டு என இருமுறை இறுதிச்சுற்று வரை முன்னேறி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் லீக் போட்டிகள் அனைத்திலும் தோல்வியைச் சந்திக்காமல் வந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து,இலங்கை ஆகிய 4 அணிகளை தோற்கடித்து இன்று தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

அந்த அணியின் கேப்டன் சூசி பேட்ஸ், ராசெல் ப்ரீஸ்ட் ஆகியோர் கடந்த போட்டிகளில் 100 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளனர். சோபி டிவைன் பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் ஸ்டாபைன் டெய்லர், ஆல்ரவுண்டர் திதேந்திர டோடின் ஆகியோர் மட்டுமே சிறப்பாக செயல்படுகின்றனர். இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்த மேற்கிந்தியத்தீவுகள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டும்.

Leave a Reply