- செய்திகள், விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் பிரபலமாக வேண்டுமானால் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்

புதுடெல்லி, மார்ச் 7:-

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் பிரபலமாக வேண்டுமானால் மகளிர் போட்டிகள் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்று இந்திய மகளிர் கிரிக்கடெ் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தொடரை வென்றது. அத்தோடு மட்டும் அல்ல இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியை வீழ்த்தி 20 ஓவர், ஒரு நாள் போட்டிகளிலும் தொடரை வென்றது.

இந்த நிலையில் இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகள் சானியா மிர்சா, சாய்னா நேவால் போல் பிரபலமாக முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் போட்டிகள் தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என்றும் அதே போல் மகளிர் கிரிக்கெட் ஒளிபரப்பப்படுமானால் கிரிக்கெட் வீராங்கனைகள் பிரபலமாவர்கள் என்று குறிப்பிட்டார்.

தொலைகாட்சி ஒளிபரப்பு மூலம் வீராங்கனைளுக்கு கார்ப்பேரட் நிறுவனங்களின் ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றார்.

ஆஸ்திரேலியா போட்டி, இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டிகளில் நன்றாக விளையாடியதாகவும் ஆனால் அவை ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் நடைபெற உள்ள மகளிருக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஒரு வாய்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply