- செய்திகள், மாவட்டச்செய்திகள்

போலீஸ் சப்- இன்ஸ்ெபக்டர் மனைவி கைது ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி…

சென்னை, ஏப்.18-
சென்னை ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மனைவி

சென்னை எழும்பூர் நரியங்காடு பகுதியிலுள்ள போலிஸ் குடியிருப்பில் வசிப்பவர் ராஜசேகர். இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலெட்சுமி(45). ராஜலெட்சுமி அந்தக் குடியிருப்பிலுள்ள போலிசாரின் உறவினர்கள் சுமார் 100 பேரிடம் ஏலச்சீட்டு நடத்துவதாகக்கூறி சிலரிடம் 2 லட்சமும் சிலரிடம் 3 லட்சமும் வசூல் செய்துள்ளார். சீட்டு முடிந்த பின்னரும் முதிர்வு பணத்தைக் கொடுக்கவில்லை.
கமிஷனரிடம் புகார்
இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கமிஷனர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவு ஏலச்சீட்டு, பணமோசடி தடுப்புப் பிரிவு போலிசில் புகார் செய்தனர். புகார் செய்து ஒரு வாரமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 3 நாட்களுக்கு முன்பு போலிஸ் குடியிருப்பில் உள்ள பெண்கள் பலர் சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, புகார் செய்தனர்.
கைது
இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ெஜயகுமார் தலைமையிலான சிறப்புப் பிரிவு மோசடி குறித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராஜலெட்சுமி பல லட்சம் மோசடி செய்ததை கண்டுபிடித்தனர். இதன்பேரில் ேநற்று முன்தினம் போலிஸ் குடியிருப்பிலிருந்த ராஜலட்சுமியை போலீசார் கைது செய்தனர். இதில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமறைவாகி உள்ளார். இந்தநிலையில் போலீசார் ராஜலட்சுமியை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, புழல் சிறையில் அடைத்தனர். மீண்டும் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய போலிசார் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply