- செய்திகள், மாநிலச்செய்திகள்

போலீசுடன் துப்பாக்கி சண்டை: பெண் நக்சலைட் பலி சத்தீஸ்கரில்

ராய்ப்பூர், ஜன.20:-
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் போலீசாருக்கும்  நக்சலைட்டுகளுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் பெண் நக்சலைட் கொல்லப்பட்டார்.
பாஸ்டர் பகுதி தலைமை காவல் துறை தலைவர் இது குறித்து கூறியதாவது:-
பிஜாபூர் மாவட்டம் பயானார் கிராம பகுதி அருகே நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு போலீஸ் படை அனுப்பபட்டது. அவர்கள் வனப்பகுதியை நெருங்கிய போது நக்சலைட்டுகள் ேபாலீசாரை நோக்கி சுட தொடங்கினர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இரண்டு தரப்பும் சில நிமிடங்கள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இறுதியில் நக்சலைட்டுகள் அந்த பகுதியை விட்டு தப்பியோடி விட்டனர்.
அதன் பிறகு அந்த இடத்தை சோதனை செய்த போலீசார் துப்பாக்கி சூட்டில் பலியான பெண் நக்சலைட் உடலை கண்டு பிடித்தனர். அவரது உடல் அடையாளம் காணப்பட்டது. இறந்த பெண் நக்சலைட் பெயர் ஜாரீனா. மேலும், அந்த பகுதியில் 2 துப்பாக்கிகள் மற்றும் இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply