- செய்திகள்

போலீசார் அதிரடி வாகன சோதனை செங்குன்றம் பகுதியில்…

செங்குன்றம், ஆக.18-

செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இவற்றை தடுத்திடவும், வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும் மாதவரம் போலீஸ் துணைக் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் தலைமையிலான போலீசார் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம், கிராண்ட்லைன் , வடகரை ஆகிய முக்கிய சந்திப்புகளில் 50-க்கும் மேற்பட்ட போலீசாருடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சோதனை தொடரும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

—-

செங்குன்றம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய காட்சி.

Leave a Reply