- செய்திகள்

பொன். ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் கண்டனம்…

 

சென்னை,ஆக.17-
தமிழ்நாடு காங்கிரஸ் பொது செயலாளர்கள் சிரஞ்சீவி, தணிகாசலம், செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக காங்கிரசையும், சத்திய மூர்த்தி பவனைப் பற்றியும் தேவையில்லாமல் விமர்சனம் செய்து வருகிறார். இதை கடுமையாக கண்டிக்கிறோம். தமிழக காங்கிரசுக்கு யாரை, எப்போது தலைவராக நியமிப்பது என்று அகில இந்திய காங்கிரசு தலைமை முடிவு செய்யும். அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் உள்ளனர்.
அதற்கு சத்திய மூர்த்தி பவனில் நடந்த சுதந்திர தினவிழா தான் உதாரணம். பொன். ராதாகிருஷ்ணன் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவரின் பொறுப்பற்ற விமர்சனம் அவர் வகிக்கும் பதவிக்கு உகந்தது இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.

Leave a Reply