- செய்திகள்

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி…

சென்னை, ஆக.25-
ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பார்த்தசாரதி கோவில்
சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று (25-ந்தேதி) சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
சிவா-விஷ்ணு கோவில்
இதேபோல மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், மாதவப்பெருமாள் கோவில், மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில், தி.நகர் சிவா-விஷ்ணு கோவில், கோயம்பேடு வைகுண்ட வாசப்பெருமாள் கோவில், சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், சைதாப்பேட்டை பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லட்சுமி ஹயக்ரீவர்
மேலும் பூந்தமல்லி வரதராஜப்பெருமாள் கோவில், நெற்குன்றம் கரி வரதராஜப்பெருமாள் கோவில், கிண்டி கோதண்ட ராமர் கோவில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள் கோவில் போன்ற கோவில்களிலும் நாளை சிறப்பு வழிபாடு, அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இஸ்கான் கிருஷ்ணர்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ண யாஜனா நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடு மற்றும் சுதா ரகுநாதன் வாய்ப்பாட்டை  தொடர்ந்து ஜெயபதாசுவாமியின் சொற்பொழிவும் நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சிருங்கேரி பிரவச்சன மந்திரத்தில் காலை 8.30 மணி முதல் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Leave a Reply