- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

பெண் எரித்து கொலை மதுரை அருகே…

மதுரை,டிச.11-
மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்தவர் வீரணன். இவரது மனைவி லட்சுமி (வயது 56). இவர் நேற்று அதிகாலையில் வீட்டிற்கு அருகே பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். லட்சுமி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லட்சுமியை எரித்து கொலை செய்ய கொளையாளிகளையும், என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார் எனவும் விசாரித்து வருகிறார்கள். மேலும் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply