- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

பெண்ணை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது தாக்குதல் 2 பேர் கைது

கரூர்,மார்ச்.1-
பெண்ணை காதலிக்க வற்புறுத்திய வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காதலிக்க வற்புறுத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம், குருவிநாயக்கன்பள்ளியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 24). இவர் கரூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். கரூரை சேர்ந்தவர் பஷீர்அகமது (23). இவரது நண்பர் சாகிர்பாட்ஷா (21). இவர்கள் இருவரும் கரூரில் உள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் பஷீர் அகமதுவின் பெண் நண்பர் ஒருவரை திருப்பதி காதலிக்க கோரி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
2 பேர் கைது

இதைத்தொடர்ந்து பஷீர் அகமது, சாகிர்பாட்ஷா, திருப்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பஷீர் அகமது, சாகிர் பாட்ஷா ஆகியோர் திருப்பதியை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து திருப்பதி, கரூர் நகர போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஷீர்அகமது, சாகிர்பாட்ஷா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply