- செய்திகள், வணிகம்

பெட்ரோல் 63 காசு, டீசல் 1.06 காசு குறைப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது

புதுடெல்லி, ஜன.1 :-

பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 6 காசும் குறைத்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது. டிசம்பர் மாதத்தில் இது 3-வது விலை குறைப்பாகும்.

இதையடுத்து, டில்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 59.98-ல் இருந்து ரூ.59.35 காசுகளாக குறைத்து விற்கப்படும். அதேபோல, டீசல் விலை லிட்டர் ரூ.46.09-லிருந்து, ரூ. 45.03 காசுகளாக குறைக்கப்படுகிறது என்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

15 நாளுக்கு ஒரு முறை

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன.

இந்த விலை குறைப்பு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை, டாலருக்கு நிகரான ரூபாயின் பரிமாற்ற மதிப்பு ஆகியவை விலை குறைப்பை நிர்ணயித்துள்ளன. அந்த விலை குறைப்பின் பலனை, நுகர்வோர்களுக்கு அளித்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் 3-வது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ந்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 58, டீசல் 25 காசுகளும் குறைக்கப்பட்டது, அதன்பின்பு, 15-ந்ேததி பெட்ரோல் லிட்டருக்கு 50 காசும், டீசல் விலை லிட்டருக்கு 46 காசும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply