- மாநிலச்செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க முடியாது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

செஸ் வரி எதிரொலியாக சென்னையில் பெட்ரோல் விலை நேற்று முன்தினம் ஒரு லிட்டர் ரூ.90ஐ தொட்டது. டீசல் விலையும் ஏறு முகத்தில் உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களைவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பெட்ரோலின் விலை 90 ரூபாயை தொட்டுருக்கும் நிலையில், ஏழை எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாகவும் எனவே அவற்றின் மீதான வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் பிரதான், வரியை குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றார். பெட்ரோல், டீசல் மீதான வரியில் இருந்து கிடைக்கும் வருவாயை நம்பியே மத்திய, மாநில அரசுகள் நலந்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்களுக்கு பெரிதும் சார்ந்துள்ளதாகவும் கூறினார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலை நிலவர அடிப்படையில் நிர்ணயிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ளதால் அதில் அரசு தலையிடமுடியாது என்று விளக்கினார். முன்னதாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்தால் மட்டுமே அவற்றின் விலை குறையும் என இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் கூறியிருந்தது.

Leave a Reply