- செய்திகள், விளையாட்டு

பெடரேஷன் கோப்பை ஜூனியர் டென்னிஸ் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

புதுடெல்லி, ஏப்.12:-
பெடரேஷன் கோப்பை ஜூனியர் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தியது.

டெல்லியில் பெடரேஷன் கோப்பை ஜூனியர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கையை வென்றது.

முன்னாதாக இந்தியாவின் மஹக் ஜெயின் 6-0, 6-0 என்ற கணக்கில் ஜனளி மனம்பெரியை வென்றார். இதையடுத்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற மற்றொரு வீராங்கனை சத்விகா 6-1, 6-3 என்ற கணக்கில் அனிகாவை வென்றார். இதையடுத்து இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற இரட்டையர் போட்டியில் சத்விகா, ஷிவானி இணைந்து 6-1, 6-2 என்ற கணக்கில் அனிகா, அன்யாவை வென்றனர். இதையடுத்து இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய அணி அடுத்த போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை சந்திக்கிறது.

Leave a Reply