- செய்திகள், விளையாட்டு

பெங்களூரு-கொல்கத்தா இன்று மோதல்

 

கொல்கத்தா, மே 16:-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று சந்திக்கிறது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு நடக்கிறது.

பெங்களூரு அணிக்கும் சரி கொல்கத்தா அணிக்கும் சரி இன்னும் மூன்று போட்டிகளே மீதமுள்ளன. கொல்கத்தா அணியைப் பொருத்தவரை 7-ல் வெற்றியும் 4-ல் தோல்வியும் அடைந்து 14 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

பெங்களூரு அணியைப் பொருத்தவரை 5-ல் வெற்றியும் 6-ல் தோல்வியும் அடைந்து 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணியைப் பொருத்தவரை மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே நான்கு இடங்களுக்குள் வந்து விடலாம். ஆக அந்த அணி பெங்களூரு அணியை வீழ்த்தி 16 புள்ளிகளைப் பெற்றுவிட்டால் சற்று நிம்மதி பெருமூச்சுடன் அடுத்த போட்டிகளை சந்திக்கலாம். ஆக இந்தப் போட்டியிலேயே அதை சாதித்துவிட வேண்டும் என்றும் அந்த அணி களம் இறங்கும்.

பெங்களூரு அணியைப் பொருத்தவரை அடுத்த மூன்று போட்டிகளிலும் கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதுவும்கூட மற்ற அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களைப் பொருத்த நான்கு இடங்களுக்கு நுழைவது அமையும். மற்ற அணிகள் புள்ளிக் கணக்கில் முன்னேறிவிட்டால் நான்கு இடங்களுக்குள் வர முடியுமா என்பது தெரியவில்லை.

பெங்களூரு அணியை பொருத்த வரை குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வரலாற்று சாதனையே படைத்துள்ளது. அதாவது ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அதாவது குஜராத் அணியை 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளனர்.

முன்னதாக கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோலியும், டிவில்லியர்ஸும் இணைந்து அதிரடியாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 229 ரன்களைக் குவித்துள்ளனர்

கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா, காம்பீரின் ஆட்டமும் சிறப்பாக உள்ளது. அத்தோடு அந்த அணியின் பந்து வீச்சு வலுவான நிலையில் உள்ளதால் கொல்கத்தாவின் பந்து வீச்சுக்கும் பெங்களூரின் பேட்டிங்குக்கும் இடையிலான போட்டி இது என்றே கூறலாம்.

Leave a Reply