- செய்திகள், மாநிலச்செய்திகள்

பெங்களூருவில் ஆப்பிரிக்க மாணவர்கள் போராட்டம்

பெங்களூரு, பிப். 7:-

பெங்களூருவில் தான்சானியா நாட்டு மாணவி தாக்கப்பட்ட,  விவகாரத்தில் அதிரடியாக துணை போலீஸ் ஆணையர் ஒருவர் சஸ்பெண்ட் செய்து நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவி தாக்குதல்

பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்பிரிக்க மாணவர் ஒருவர் ஓட்டிவந்த கார் மோதி உள்ளூரைச் சேர்ந்த ஒரு  பெண் பலியானாள். இதையடுத்து ஆத்திரமடைந்த  மக்கள் அப்பகுதியில் காரில் வந்த ஆப்பிரிக்க மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். காரில் இருந்த தான்சானியா மாணவியின் ஆடைகளை கிழித்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் தன் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்து அந்த மாணவி போலீசில் புகார் அளித்தார். அதை முதலில் போலீசார் ஏற்கவில்லை. நீண்ட நேரத்துக்கு பின்பே புகாரைப் பெற்றனர்.

தூதரக அதிகாரிகள் ஆய்வு

இந்த சம்பவம் தொடர்பாக  9 பேர் கைது செய்யப்பட்டனர். பணியில் கவனக்குறைவாக இருந்த போலீஸ் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில்,  தான்சானியா நாட்டுதூதர் ஜான் டபிள்யு எச் கிஜாசி, ஆப்பிரிக்க யூனியன் அதிகாரிகள், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் அடங்கிய குழு நேற்றுமுன்தினம் பெங்களூருவுக்கு வந்து மாணவர்களையும், அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினர்.

ஆணையர் சஸ்பெண்ட்
இந்நிலையில், பெங்களூரு போலீஸ் ஆணையர் என்.எஸ். மேகரிக் கூறுகையில், தான்சானியா மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் பணியில் அலட்சியமாக இருந்த, யஸ்வந்த்பூர் மண்டல் போலீஸ் துணை ஆணையர் ஏ.என். பைஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில் 6 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் இனவெறி என்ற விஷயம் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

பாக்ஸ் மேட்டர்…..

தான்சானியா மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்ைக குறித்து அந்நாட்டு தூதர் கிஜாசியிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “நாங்கள் வந்து விசாரிப்பதற்குள் மத்திய அரசும், மாநில அரசும் விரைவாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மாணவர்கள் ரத்ததானம்

தான்சானியா மாணவி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெங்களூருவில் உள்ள டவுன் ஹால் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், சர்வதேச மாணவர்கள் கூட்டமைப்பினர் சார்பில் ரத்த தானம் முகாம் நடத்தி ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர். இனவெறியுடன் நடந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி பதாகைகளையும் ஏந்தி வந்தனர்.

Leave a Reply