- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

பூட்டிய வீட்டுக்குள் முதியோர்கள் மர்மசாவு திருவெறும்பூர் அருகே…

திருவெறும்பூர், ஏப். 16:-

திருவெறும்பூர் அருகே தனியே வசித்த தம்பதியினர் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் முத்து(75) இவர் குன்னுரில் உள்ள அரசு மருத்துவமனையில் நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது முதல் மனைவி 40 ஆண்டுக்கு முன்பு இறந்ததால் சாவித்திரி(70) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார். இரண்டாவது மனைவிக்கு குழந்தைகள் இல்லை.

இந்தநிலையில் முத்துவும் சாவித்திரியும் தனியாக வசித்து வந்தனர். நேற்று திருவெறும்பூர் பிரகாஷ்நகரில் உள்ள சாவித்திரியின் அக்காள் ருக்குமணி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த தகவலை சொல்ல உறவினர் வந்து கதவை தட்டினார். ஆனால், நீண்டநேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

மர்மான முறையில் உயிரிழப்பு

புகாரின் பேரில் திருவெறும்பூர் ஏ.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் அங்கு வந்த போலீசார் முத்துவின் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துவும் சாவித்திரியும் கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது. அவர்கள் இறந்து இரண்டு நாட்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply