- செய்திகள், மாநிலச்செய்திகள்

பூட்டியாவுக்கு ரூ.17 கோடி சொத்து தேர்தலில் போட்டியிடும்

கொல்கத்தா, மார்ச் 31:-

மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கால்பந்து வீரர் பாய்சங் பூட்டியா தனக்கு ரூ.17 கோடி சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பாய்சங் பூட்டியா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிலிகுரி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் அசோக் பட்டாச்சார்யாவை களம் இறங்கியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் பூட்டியா தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் தனக்கு ரூ.17 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் கடந்த 2014-15-ம் நிதியாண்டில் ரூ.35 லட்சம் வருமானம் வந்ததாக தெரிவித்துள்ள பூட்டியா, ரூ.3.88 கோடிக்கு ஆடி கார், நகைகள், வங்கி இருப்பு, முதலீடு கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், யுனைடெட் சிக்கி கால்பந்து கிளப்பில் ரூ.6.22 லட்சம் பங்குகளும், ரூ.13.77 கோடி மதிப்பில் சிக்கிம், கொல்கத்தாவில் வீடுகளும் இருப்பதாக பூட்டியா தெரிவித்துள்ளார்.

Leave a Reply