- செய்திகள், விளையாட்டு

புரோ கபடி: பாட்னா அணி சாம்பியன்

 

புதுடெல்லி, மார்ச் 7:-
புரோ கபடி லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளது பாட்னா.
புரோ கபடி லீக் இறுதி ஆட்டம் புது டெல்லியில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் பாட்னா-மும்பை அணிகள் மோதின. இரண்டு அணிகளும் சமப் பலத்துடன் விளங்கியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த நிலையில் பாட்னா அணி 31-28 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் மும்பை அணியை தோற்கடித்து பட்டத்தை வென்றது. முன்னதாக பாட்னா அணி முன் பாதியில் 19-11 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. பின்னர் பின் பாதியில் பாட்னா அணியின் முன்னிலை 29-28 என்ற அளவில் வெகுவாக குறைந்தது. இந்த வெற்றியை அடுத்து பாட்னா அணிக்கு ரூபாய் 1 கோடி பரிசு வழங்கப்பட்டது.

புரோ கபடி லீக் தொடரில் பட்னா அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Leave a Reply