- செய்திகள், விளையாட்டு

`புரியாத புதிர்' என்கிறார் ஹர்ஷா போக்ளே

புதுடெல்லி, ஏப்.12:-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு கிரிக்கெட் வீரர்கள் காரணமாக இருக்க மாட்டார்கள் என்று கிரிகெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஐபிஎல் போட்டிகளிலும் ரசிகர்களைக் கவரும் வண்ணம் வர்ணனை செய்துவந்தவர் ஹர்ஷா போக்ளே. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பிரியமானவர். இப்படிப்பட்டவர் 9-வது ஐபிஎல் போட்டிக்கான வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் நீக்கப்பட்டதற்கு பல்ேவறு காரணங்கள் கூறப்பட்டது. வர்ணனையாளர்களை நியமிப்பதில் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை பெறப்பட்டதாகவும் வீரர்களிடம் இருந்தும் கருத்து கேட்கப்பட்டதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் தான் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பேஸ் புக்கில் கருத்து தெரிவித்துள்ள பேக்ளே, பிசிசிஐ-ஆல் இது வரை தன்னிடம் காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தனது நீக்கத்துக்கு வீரர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுவதில் உண்மை இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply