- ஆன்மிகம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

புதுவையில் உலக நன்மைக்காக பாதயாத்திரை

புதுச்சேரி,ஜன.4-
புதுவையில் உலக நன்மைக்காக ஏராளமான பக்தர்கள் புனிதபாதயாத்திரை மேற்கொண்டனர்.
லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.
புதுவை ஸ்ரீலட்சமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் உலக நன்மைக்காக ஜனவரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த பக்தர்கள் சிங்கிரி கோவிலுக்கு புனித பாதயாத்திரை செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு 20-ம் ஆண்டு பாதயாத்திரை நேற்று காலை 5 மணிக்கு புதுவை வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டது. லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. முன்னிலையில், ஜீயர்சுவாமிகள் பாதயாத்திரையை தொடக்கி வைத்தார்.
தமிழக அமைச்சர்
பாதயாத்திரை புதுவை-கடலூர் சாலை வழியாக சென்றது. புதுவை ரோடியர்மில் திடல் அருகே தமிழக அமைச்சர் சம்பத் பாதயாத்திரை குழுவை வரவேற்று வாழ்த்தினார். பாதயாத்திரை சிங்கிரி கோவில் லட்சுமிநரசிம்ம சுவாமி கோவிலை சென்றடைந்தது. 15 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பஜனை
இந்த புனித யாத்திரை விழாவில் திவ்ய நாம பஜனையும், பிருந்தாவன பஜனைகள் மற்றும் நரசிம்மபெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply