- செய்திகள், திருவண்ணாமலை, மாவட்டச்செய்திகள்

புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை…

செங்குன்றம், ஏப். 19-
திருவண்ணாமலை  மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் லோகலட்சுமி (வயது 18), சிவக்குமார் (20). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து  வந்துள்ளனர். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே ஊரைவிட்டு  ஓடி வந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சென்னை அருகே உள்ள புழல் பகுதி   கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் புழல் புத்தகரம்  ஜெயலட்சுமிநகரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் லோகலட்சுமி தாயின் நினைவாகவே இருந்துள்ளார். தாயை பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் வேலை செய்து வரும் கட்டிடத்தின் 2வது  மாடியில் தனது துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் அம்பத்தூர் ஆர்.டி.ஓ. வீரப்பன்  விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply