- செய்திகள்

புதுச்சேரியில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ரேஷன் கடைகள் மூலம் 30 கிலோ இலவச அரிசி அமைச்சர் அறிவிப்பு…

புதுச்சேரி, ஆக.-9
தேர்தல் வாக்குறுதிபடி இந்த மாதம் முதல் தலா 30 கிலோ இலவச அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று புதுச்சேரியில் அமைச்சர் அறிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிப்பு
புதுவையில் கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் இலவசமாக 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத்துக்கும் தலா 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக கடந்த மாதம் 20 கிலோ அரிசி ரே‌ஷன் கடைகளில் வழங்கபட்டது.
தலா 30 கிலோ அரிசி
குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமி, இந்த மாதம் முதல் தேர்தல் வாக்குறுதிபடி தலா 30 கிலோ அரிசி வழங்கப்படும் என்று இன்று அறிவித்தார். கடந்த ஆட்சியாளர்கள் இலவச அரிசியை சரியாக வழங்கவில்லை. அவர்கள் வழங்காமல் விட்ட 20 கிலோ அரிசியை நாங்கள் கடந்த மாதம் வழங்கியுள்ளோம். தேர்தலில் நாங்கள் 30 கிலோ அரிசி வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தோம். அதை உடனடியாக அமுல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
தரமான அரிசி
அதன்படி இந்த மாதத்தில் இருந்து அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் தலா 30 கிலோ அரிசி வழங்கப்படும். இந்த அரிசி கடந்த கால அரசு வழங்கியது போல மோசமாக இல்லாமல் தரமான அரிசியாக வழங்கப்பட உள்ளது.
பால் உற்பத்தியை பெருக்க
நாராயணசாமி தலைமையிலான புதிய அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படும். நாள்தோறும் 60 ஆயிரம் லிட்டர் பால் வெளி நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுகிறது. ஆனால் இந்த பால் தரம் இல்லாமல் உள்ளது. இதனால் புதுவையிலேயே பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply