- செய்திகள், வணிகம்

புதிய வாடிக்கையாளர்களுக்கு சலுகை

 

புதுடெல்லி, டிச.21:-

இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் புதிய வாடிக்கையாளர்களுக்கு கட்டண குறைப்பு சலுகையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் அனுபம் வஸ்தவா இது குறித்து கூறியதாவது:-
நிறுவனத்தின் அடிப்படை கட்டமைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது. புதிய வாடிக்கையாளர்களுக்கு செல்போன் அழைப்பு கட்டணத்தில் 80 சதவீதம் வரை குறைக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பி.எஸ்.என்.எல். இணைப்பை பெறும் புதிய வாடிக்கையாளர்கள் முதல் 2 மாதங்களுக்கு நொடி, நிமிட திட்டங்களில் கட்டண சலுகையை பெறுவர். நிமிட திட்டத்தில் ரூ.37-க்கு ரீசார்ஜ் செய்தால் பி.எஸ்.என்.எல். லோக்கல், எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 10 காசுகளும், இதர நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 30 காசுகளும் வசூலிக்கப்படும். ெநாடி திட்டத்தில் ரூ.36-க்கு ரீசார்ஜ் செய்தால் பி.எஸ்.என்.எல். ேலாக்கல், எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 3 நொடிக்கு 1 பைசாவும், இதர நெட்வொர்க் அழைப்புகளுக்கு 3 நொடிக்கு 2 பைசாவும் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply