- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

புதிய வசதி அறிமுகம் இணையதளத்தில் வேட்பாளர்கள் உறுதிமொழி பத்திரம்…

சென்னை, மார்ச். 30-
இணையதளம் (ஆன்லைன்) மூலம் வேட்பாளர் உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்யும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம ்ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேட்பு மனுவுடன்

* மே மாதம் 16-ந் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் பொதுத் தேர்தலின்போது போட்டியிடும் வேட்பாளர்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தங்கள் வேட்புமனுவுடன் உறுதிமொழிப் பத்திரம் (படிவம்-26) தாக்கல் செய்ய வேண்டும். நோட்டரி பப்ளிக்/பிரமாணஆணையர், முதல் வகுப்பு நடுவர் முன்னிலையில் வேட்புமனு சான்றொப்பமிடப்படவேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும்போது சான்றொப்பமிடுவது ஒரு சட்டரீதியான தேவை மற்றும் பின்பற்றப்பட வேண்டியிருப்பதால், இந்தியத் தேர்தல் ஆணையம், விருப்பத்தின்பேரில் இணையதளம் (ஆன்லைன்) மூலம் உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது.

இணையதள முகவரி

* வேட்பாளர்கள் இணையதள மூலமாக உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்ய விரும்பினால் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வலைதள முகவரி www.eci.nic.in.-ல், online submission of canditate  affidavits  கிளிக் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் முத்திரைதாளில் அச்சு எடுப்பதற்கான முறையில் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரமாண ஆணையர் அல்லது முதல் வகுப்பு நடுவர் அல்லது நோட்டரி பப்ளிக் முன்னிலையில் உறுதிமொழிப்பத்திரத்தினை அதற்குரிய கட்டணத்துடன் முத்திரைத்தாளில் தேர்தல் நடத்தும்அதிகாரியிடம் உறுதிமொழி தாக்கல் செய்யப்படவேண்டும். சான்றளிக்கப்பட்ட உறுதிமொழிப்பத்திரமானது வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.

சரியாக பூர்த்தி செய்யவேண்டும்

* இணையதள மூலமாக வேட்பாளர்களே உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்யலாம். அவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்வதற்கு தேவையான ஆன் லைன் உதவி கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழிப்பத்திரத்தை அச்சு எடுத்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இணையதள மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட வேண்டிய நெடும்பத்திகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பின் அவ்விண்ணப்பங்களை இணையதளம் ஏற்றுக்கொள்ளாது. இதன்மூலம் நெடும்பத்திகள் சரியாக பூர்த்தி செய்யப்படாததால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதை தவிர்க்கலாம்.
இரு மொழிகளில்

* தற்பொழுது இந்தியத் தேர்தல் ஆணையமானது உறுதிமொழிப்பத்திரத்தினை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

* இணையதளத்தின் மூலம் உறுதிமொழிப்பத்திரத்தினை தாக்கல் செய்வதில் வேட்பாளருக்கு கூடுதல் செலவு எதுவுமில்லை. இணையதளத்தின் மூலம் தாக்கல் செய்யப்பட்ட உறுதிமொழிப்பத்திரத்தினை வேட்பாளர் அச்சு எடுத்த பின்பும், பார்த்துக் கொள்ளலாம். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சான்றொப்பமிட்ட உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்யும் முன்பு வரை, இணையதள பதிவில் மாற்றங்கள் செய்யலாம்.
தேர்தல் ஆணையம்
* இந்த இணையதள சேவைகள், தேசிய தகவல் மையம் மற்றும் தேசிய செக்யூரிட்டி டெபாசிட்டரி ஆகியவற்றினால் வழங்கப்படுகிறது. நிர்வாக தொடர்பான விளக்கங்களுக்கு supportaffidavit @ eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொழில்நுட்பம் தொடர்பான விளக்கங்களுக்கு 011-23052043  என்ற தொலைபேசி எண்ணினையும்  தொடர்புக் கொள்ளலாம், என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறி உள்ளார்.

Leave a Reply