- செய்திகள், மகளிர்

பீர்க்கங்காய்

 

உஷ்ண சுபாவம் கொண்ட காயாக இருந்தாலும், உடலை குளுமைப்படுத்தி நீர்ச்சத்தை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது பீர்க்கங்காய்.
சிறுநீரை பெருக்கும். மூச்சுத் திணறலுக்கு நல்ல மருந்து. கபத்தினை வெளியேற்றும்,  வயிற்று உபாதைகளை சரிசெய்யும்.  எளிதில் செரிக்கக்கூடியது.
பீர்க்கங்காய்க்கு புளிப்பு இல்லை என்பார்கள்.  சுவை சற்றே இனிப்பு சுவையுடன்  இருப்பதால், புளி சேர்த்து சமைக்கும்போது, நாவை சுண்டியிழுக்கும். எண்ணெயில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து துவையலாக அரைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.  மலச்சிக்கல் நீங்கும்.
நீர் சத்து அதிகமாகவும், கொழுப்பு மிகக் குறைந்த அளவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிடலாம்.  வாத பிரச்னை இருப்பவர்களை தவிர்த்து மற்றவர்கள் சாப்பிடலாம்.
பீர்க்கங்காயை, பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாப்பிட்டுவர, ரத்தத்தை சுத்தப்படுத்தும்.  மதுவினால் ஏற்பட்ட நஞ்சு நீங்கும்.  மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
கலோரி அளவு மிகக் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது.  இதனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
பீர்க்கங்காயை சாறாக தயாரித்து கருப்பட்டி சேர்த்து, அருந்திவர, கல்லீரல், மண்ணீரல்  பாதிப்புகள் நீங்கும்.

Leave a Reply