- சினிமா, செய்திகள், மாவட்டச்செய்திகள்

பீப் சாங் பாடல் விவகாரத்தில் சிக்கிய நடிகர் சிம்பு பாஸ்போர்ட் திடீர் முடக்கம் போலீசார் அதிரடி நடவடிக்கை…

சென்னை, டிச. 18-
‘பீப் சாங்’ பாடல் விவகாரம் தொடர்பாக, போலீசார் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தராத நடிகர் சிம்புவின் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது.
போராட்டம்
சினிமா நடிகர் சிம்பு இசை அமைப்பாளர் அனிருத் இசையில்  பாடியதாக வெளியான ‘பீப் சாங்’ பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் எதிராக தமிழகம் முழுவதும் உருவபொம்மைகள் கொளுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு வடிவங்களில் போராட்டமும் நடத்தப் பட்டு  வருகிறது.

இதுதொடர்பாக கோவை போலீஸ் கமிஷனரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புகார் மனவும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர் மீது கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். வரும் 19- ந் தேதி (நாளை) இவர்கள் இருவரும் கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மனும் வழங்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் முடக்கம்

இந்த நிலையில்  ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள நடிகர் சிம்பு  ‘இந்த விவகாரத்தை  சட்டப்படி சந்திக்க தயார்’ என தெரிவித்து உள்ளார்.  எனவே, அவர் நாளை போலீசார் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க மாட்டார் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிம்புவின் பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் வெளிநாடு தப்பி சென்று விடாமல் தடுப்பதற்காக போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கனடாவில் அனிருத்
இதற்கிடையே கனடா சென்றிருந்த இசை அமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று முன்தினம்  சென்னை திரும்ப திட்டமிட்டு இருந்தார்.  ஆனால் அவர்  கடைசி நேரத்தில் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து,  சென்னை திரும்புவதை ரத்து செய்து விட்டாராம்.  அவரது இசைக்குழுவை சேர்ந்த பிற கலைஞர்கள் மட்டுமே சென்னை வந்தனர்.
பெண்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி  இருக்கும் ‘பீப் சாங்’ விவகாரத்தில், சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர் போலீசாருக்கு  ‘டிமிக்கி’ கொடுத்து வருவதை தடுப்பதற்கு, ஐதராபாத் வரை சென்று சிம்புவை கைது செய்யலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

Leave a Reply