- செய்திகள்

பி.எட். படிப்புகளுக்கு 1-ந் தேதி முதல் விண்ணப்ப வினியோகம் ஆகஸ்டு மாதம் 3-வது வாரத்தில் கலந்தாய்வு…

சென்னை,ஜூலை.29-

பி.எட். படிப்புகளுக்கு 1-ந் தேதி முதல் விண்ணப்ப வினியோகம் தொடங்கவுள்ளது. ஆகஸ்டு மாதம் 3-வது வாரத்தில் கலந்தாய்வு நடக்கிறது.

விண்ணப்ப வினியோகம்
தமிழகம் முழுவதும் உள்ள 21 அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் (பி.எட்) கல்லூரிகளில் உள்ள 1,777 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் உள்ள விலிங்ஸ்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.

இதுகுறித்து அக்கல்வி நிறுவன முதல்வரும், பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளருமான தில்லை நாயகி கூறியதாவது:-

நடப்பு ஆண்டு பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை வினியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க ஆகஸ்டு 10-ந்தேதி கடைசி நாளாகும்.
தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 10-ந்தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் கல்லூரி இணையதளமான www. ladywillingdoniase.com-ல் வெளியிடப்படும்.

கட்டண உயர்வு
கடந்த ஆண்டு விண்ணப்ப கட்டணம் ரூ.300 ஆக இருந்தது. இந்தாண்டு முதல் விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.இ. பட்டதாரிகளும், பி.எட் படிப்பில் சேர்ந்து படிக்கலாம் என்ற விதிமுறை கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த வருடம் 220 முதல் 240 இடங்கள் பொறியியல் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

இந்த ஆண்டு பி.எட். கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்டு 3-வது வாரத்தில் சேர்க்கையை தொடங்கி ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply