BREAKING NEWS

பிளிஸ்கோவா வெளியேற்றம்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், ஹெலப் 4வது சுற்றுக்கு முன்னேறினார். பிளிஸ்கோவா 3வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) நேற்று காலை நடந்த 3-வது சுற்றில் சக நாட்டை சேர்ந்த பேப்லோ பஸ்டாவை எதிர் கொண்டார். இதில் நடால் 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 5வது வரிசையில் உள்ள டொமினிக் தீயம் (ஆஸ்திரியா) 6-2, 6-4, 6-7 (5-7), 6-4 என்ற கணக்கில் அமெரிக்க வீரர் பிரிட்சை வீழ்த்தினார்.
உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், கடந்த முறை அரை இறுதிக்கு நுழைந்தவருமான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) நடந்த 3வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த அனஸ்டசியாவை எதிர் கொண்டார்.
30-வது வரிசையில் உள்ள அனஸ்டசியா 7-6 (7-4), 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதேபோல 6வது வரிசையில் உள்ள பென்சிக்கும் (சுவிட்சர் லாந்து) 0-6, 1-6 என்ற கணக்கில் அனட்டிடம் (எஸ்டோனியா) தோற்றார்.4-வது வரிசையில் உள்ள ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 6-11, 6-4 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனை சேர்ந்த யுலியாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 17-ம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-7, (4-7), 6-3 என்ற கணக்கில் இத்தாலியை சேர்ந்த கேமிலா ஜியோரியை தோற்கடித்தார்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *