- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30-ந் தேதி வௌியீடு?

 

சென்னை, மார்ச். 31-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது

பிளஸ்-2 தேர்வுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 4-ந் தேதி பிளஸ்-2 பொது தேர்வுகள் தொடங்கின. இவற்றை 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவர்களும், 42 ஆயிரத்து 347 தனித்தேர்வர்களும் எழுதி வருகின்றனர். இவற்றில் இயற்பியல் மற்றும் பொருளாதாரம் தேர்வு தவிர மற்ற தேர்வுகள் முடிவடைந்துள்ளது.  நாளையுடன்(வெள்ளிக்கிழமை) பிளஸ்-2 தேர்வுகள் முடிவடைகின்றன.

இதற்கிடையே பிளஸ்-2 பாடத்தில் மொழி பாடத்துக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி முதல் முக்கிய பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளன. அன்றையே தினம் விடைத்தாள் குறிப்பு வழங்கப்படும் போது வேதியியல் பாடத்திற்கு 6 மதிப்பெண் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும் என்று தேர்வு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முடிவுகள்

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட தேர்வு துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல 10-ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply