- செய்திகள்

பிரிட்ஜ் ஸ்டோனின் புதிய டயர்…

 

உலகின் மிகப்பெரிய டயர் மற்றும் ரப்பர் நிறுவனமாகிய பிரிட்ஜ்ஸ்டோன் கார்பரேஷனின் கிளை நிறுவனமாகிய பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா பி. லிட்.,  இந்தியாவில், அமெரிக்காவின் புகழ்பெற்ற டயர் பிராண்டாகிய ஃபயர்ஸ்டோனை அறிமுகப்படுத்தியது.
அறிமுக விழாவில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் காசுஹிகோ மிமுரா கூறுகையில், ‘இந்தியாவில், பயர்ஸ்டோனை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறோம். கடந்த சில வருடங்களில், இந்தியா உலகப் பொருளாதாரத்தில் ஒரு சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது, பயர்ஸ்டோன் முதலில், பயணியர் கார் மற்றும் எஸ்யுவி பிரிவுகளில் கவனம் செலுத்தும் அடுத்ததாக பெரிய வகை வாகனங்களில் கவனம் செலுத்தும். பரவலான டீலர்களின் இந்தியா முழுவதும் விற்பனையாளர் நெட்வர்க் மூலமும், மிகச்சிறந்த தரம் மற்றும் சேவை மூலம் ஒரு நியாயமான அளவிலான சந்தையைக் கைப்பற்ற விரும்புகிறோம்’ என்றார்.

Leave a Reply