- செய்திகள்

பிரஸ் கிளப்

தே.மு.தி.க.வுடன் கூட்டணி
பா.ஜ.க.வை முந்தியது தி.மு.க.!
‘‘முக்கிய பிரமுகர்களை தீவிரமா கண்காணிக்கிறாங்களாம் பா…’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை தொடங்கி வைத்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘எதைப் பத்தி சொல்ல வர்றீரு வே…?’’ என்று கேட்டார் நிருபர் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.
‘‘தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை அறிவிச்ச தலைமை தேர்தல் ஆணையர், ‘தமிழகத்துல வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறதை தடுக்கிறதுதான், எங்களுக்கு முன்புள்ள முக்கிய சவால்’னு குறிப்பிட்டு பேட்டி கொடுத்தாரு பா…
‘‘அதனாலதான், தேர்தலுக்கு 2 மாதங்கள் இருக்கும்போதே, தமிழகத்துல வங்கிக்கணக்குகள்ல நடக்கிற பண பரிவர்த்தனைகளை தேர்தல் ஆணையம் தீவிரமா கண்காணிக்க ஆரம்பிச்சிடுச்சு… மற்ற மாநிலங்கள்ல இந்த கண்காணிப்பு நடவடிக்கையே இன்னும் துவங்கலைன்னு சொல்றாங்க பா…
‘‘அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களோட வங்கிக் கணக்குகள்தான், தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகி இருக்காம்… இதுக்காக தனியா ஒரு பட்டியல் தயாரிச்சு, தினமும் அந்த கணக்குகள்ல நடக்கிற பண பரிவர்த்தனை பத்தின அறிக்கையை, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிக்கிட்டு இருக்காங்களாம் பா….
‘‘அதேபோல, தேர்தல் பறக்கும் படையினர் 704 அணிகளா பிரிஞ்சு, தீவிரமான வாகனச் சோதனையில இறங்கிட்டாங்க… தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால, பணத்தை இடப்பெயர்ச்சி செய்ய முடியாம அரசியல்வாதிகள் தவிக்கிறாங்க பா…’ என்று தகவலை சுருக்கமாக முடித்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.

‘‘மூன்றாம் கட்டமா ஒரு அணியை களம் இறக்கி இருக்கிறதா சொல்றாங்க வே…’’ என்று அடுத்து பேச ஆரம்பித்தார் மூத்த நிருபர் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.
‘‘யாரைப் பத்தி சொல்றீங்கோ சார்…?’’ என்று கேட்டார் நிருபர் அழகுமணி.
‘‘தே.மு.தி.க.வோடு தி.மு.க. தரப்பு பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு வர்றதா மாதக்கணக்குல செய்தி வந்தபடி இருக்கு… முதல்கட்டமா, மு.க. ஸ்டாலினின் முக்கிய உறவினர் தலைமையில ஐவர் குழு பேச்சுவார்த்தை நடத்தினதா சொன்னாங்க வே…
‘‘இரண்டாம் கட்டமா, மீடியா அதிபர் நடத்தின பேச்சுவார்த்தையிலதான், முன்னேற்றம் ஏற்பட்டு, தொகுதி பங்கீடு வரைக்கும் முடிஞ்சதா செய்தி வெளியாச்சு… இந்த ரகசிய பேச்சுவார்த்தை விவரங்கள் கசிஞ்சதாலதான், பேச்சுவார்த்தையே நடத்தலைன்னு தே.மு.தி.க. தரப்புல மறுப்பு தெரிவிச்சாங்களாம்…
‘‘இந்த நிலைமையில, பேச்சுவார்த்தையில உடன்பாடு ஏற்படாத விஷயத்தை பேசி முடிக்க, மூன்றாவது கட்டமா இரண்டு வி.ஐ.பி.க்களை தி.மு.க. தரப்பு களம் இறக்கி இருக்காம்… பிரபல சிமெண்ட் ஆலை அதிபரும், தந்தை பெயர்ல கல்லூரிகள் நடத்துற கல்வி அதிபரும் பேச்சுவார்த்தை நடத்துறதா சொல்லுதாவ…
‘‘இந்த நிலைமையில, நேற்று நிறைவடைஞ்ச தி.மு.க. நேர்காணல்ல பங்கேற்ற மேலிட பிரமுகர் ஒருத்தர், அங்கிருந்த கட்சியினரிடம், ‘தே.மு.தி.க.வோடு பேசி முடிச்சாச்சு… சந்தோஷமா போய் தேர்தல் வேலையை பாருங்கய்யா’ன்னு சொன்னதா சொல்றாங்க வே…’’ என்று தகவலை முடித்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.

‘‘டெல்லியிலயும் பரபரப்பு கிளம்பிடுச்சுங்கோ…’’ என்று அடுத்து பேச ஆரம்பி்த்தார் நிருபர் அழகுமணி.
‘‘விஷயத்தை விளக்கமா சொல்லு பா…’’ என்று கேட்டார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘கூட்டணி இழுபறியா இருக்கிறதால, தே.மு.தி.க. கட்சி தலைமை அலுவலகம், விஜயகாந்த் வீடு அதேபோல கோபாலபுரம், அறிவாலயம் இந்த இடங்கள் மீது ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் திரும்பி இருக்குங்கோ…
‘‘இந்த நிலைமையில, டெல்லியில மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டுல, பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை, விஜயகாந்த்தை மைத்துனர் சுதீஷ் சந்திச்சுப் பேசப் போறதா நேத்து காலையில தகவல் வெளியாச்சுங்கோ…
‘‘அமித் ஷாவோட பேசப் போறதால கூட்டணி முடிவாகிடும்னு நிருபர்களும், கேமராமேன்களும் அங்க குவிஞ்சிட்டாங்க… சில மணி நேரத்துக்குப் பிறகு, ‘பேச்சுவார்த்தை நடத்த யாரும் வரலை’ன்னு பிரகாஷ் ஜவடேகர் சொல்லி இருக்காருங்கோ…
‘‘தே.மு.தி.க. தரப்புலயும் மறுப்பு வெளியிட்டுட்டாங்க… ‘டில்லி போய் யாரையும் சந்திச்சுப் பேசணும்னு எங்களுக்கு அவசியமில்லை’ன்னு அறிக்கையில காட்டமாக குறிப்பிட்டிருக்காங்கோ…
‘‘தி.மு.க. தரப்புல பேச்சுவார்த்தையை முடிக்குறதுல வேகம் காட்டுறாங்க… பா.ஜ.க. தலைவர்களோ, ‘தனித்துப் போட்டியிடவும் தயார்’னு பேசிக்கிட்டு வர்றாங்க… இதை வைச்சு பார்க்கும்போது, தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்குறதுல, பா.ஜ.க.வை தி.மு.க. முந்திடுச்சுன்னு சொல்றாங்கோ…’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை நிறைவு செய்தார் நிருபர் அழகுமணி.

Leave a Reply