- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

பிரஸல்ஸ் நகரில் காணாமல் போன தமிழக இளைஞரை கண்டுபிடிக்க வேண்டும்

சென்னை, மார்ச் 26-
பிரஸல்ஸ் நகரில் காணாமல் போன தமிழக இளைஞரை கண்டுபிடிக்க வேண்டும் மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோரிக்கை

பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த பயங்கரவாத சம்பவம் மிகுந்த கண்டனத்திற்குரியது.

மேலும் இச்சம்பவம் நடைபெற்ற போது பிரஸ்லஸ் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஒருவர் காணாமல் போய்விட்டார். அவரைப் பற்றிய தகவல் இதுவரை கிடைக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதனால் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

எனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக பெல்ஜியம் நாட்டுடன் தொடர்பு கொண்டு தேடுதல் பணியைத் தீவிரப்படுத்துமாறு வலியுறுத்த வேண்டும். மேலும் விரைந்து அந்த இளைஞரை கண்டுபிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Leave a Reply