- ஆன்மிகம், செய்திகள், மாநிலச்செய்திகள்

பிரமோற்சவத்தின் 9ம் நாளையொட்டி திருச்சானூர் கோவிலில் தேரோட்டம்…

திருப்பதி டிச.16:- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரமோற்சவத்தின் 9ம் நாளான நேற்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
பிரம்மோற்சவம்
திருப்பதி அருகேயுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரமோற்சவம் கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

தேரோட்டம்
இந்த நிலையில் பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற்றது. இதில் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தோில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
குதிரை வாகனத்தில்..
இதைதொடர்ந்து இரவில்  குதிரை வாகனத்தில் வாகன மண்டபத்தில் இருந்து எழுந்தருளி மாட வீதியில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தாயாரை தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தின் நிறைவு நாளான இன்று கோவில் தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாாி நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலையில் கோவில் தங்ககொடி மரத்தில் ஏற்றப்பட்ட பிரமோற்சவ கொடி இறக்கப்பட்டு பிரமோற்சவம் நிறைவடையும்.

Leave a Reply