- செய்திகள்

பிரசாரத்துக்கு பேரம் பேசும் நடிகர்- நடிகைகள்…!

 

‘‘ஒரு வழியா தொகுதி பங்கீட்டு இன்னக்கி இறுதி செய்ய போராங்களாம் வே…’’ என்று பிரஸ் கிளபில் விவாதத்தை தொடங்கி வைத்தார், மூத்த நிருபர் இசக்கி முத்தன்.
‘‘எந்த கட்சியை பத்தி சொல்றீங்கோ சார்…?’’ எனக் கேட்டார் ‘ஆல் இன் ஆல்’ நிருபர் அழகுமணி.
‘‘சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், தொகுதி உடன்பாடு செய்து கொள்வதில் கொஞ்சம் பிடிவாதம் காட்டிதாம்… அதாவது கடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற 64 தொகுதியை இப்பவும் வேணும்ன்னு கேட்பதுதான் தாமதத்துக்கு காரணமாம் வே….
‘‘தி.மு.க.வோ 30 தொகுதிகள் வரை கொடுக்க தயாருன்னு சொன்னதாம், அதுக்கு டெல்லியில் இருந்து வந்த தலைவர்கள் ஒத்துகவில்லையாம்… இதையடுத்து கனிமொழி நடத்திய பேச்சுவார்த்தையால் காங்கிரசுக்கு 40 தொகுதிகளோடு உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக பேசிகிறாங்க வே…
‘‘அதன்படி, குலாம் நபி ஆசாத் இன்னிக்கி கருணாநிதியை சந்திக்க போகிறாராம், அப்ப தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டுக்கான உடன்பாடு ஏற்பட்டு விடும்ன்னு சொல்லிக்கிறாங்க… அதோடு காங்கிரசுக்கு எந்ததெந்த தொகுதிகள் என்பதையும்  உறுதி செஞ்சியிடு வாருன்னும் காங்கிரஸ் தரப்பில் பேசிகிறாங்க வே…’’ என்று தனது தகவலை முடித்தார், மூத்த நிருபர் இசக்கி முத்தன்.
‘‘தேர்தல் அறிக்கையை வெளியிட ஆளும் கட்சியை எதிர்பார்த்து காத்து இருக்காங் கோ…’’ என அடுத்த தகவலை ஆரம்பித்தார் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.
‘‘எந்த கட்சிய பத்தி சொல்ற பா…’’ எனக் கேட்டார் போலீஸ் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘தி.மு.க.வை பத்திதான் சொல்றேன். இந்த தேர்தலில் எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை, அதனால் தேர்தல் அறிக்கையைதான் முழுமையாக நம்பி இருக்காம்… அதுக்காக வாக்காளர்களை கவரும் வகையில் அந்த கட்சி தேர்தல் அறிக்கையை தயாரித்து வைத்து இருக்காங்களாம்…
‘‘இந்தநிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேத்து ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினாரு… அப்ப கடந்த சட்டமன்ற தேர்தல் போல இந்த முறை அவரசப்பட்டு அ.தி.மு.க.வுக்கு முன்னதாக தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டாம்ன்னு பேசிக்கிட்டாங்களாம், முக்கியமா அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில இல்லதா முக்கிய அம்சங்கல சேர்க்கலாம்ன்னு இருக்காங்களாம், அதோடு தமிழகமே எதிர்பாக்கும் மதுவிலக்கு பத்தி என்ன சொல்றாங்கன்னு பாத்துக்கிட்டு அதுக்கு ஏத்தா மாதிரி நம்ம அறிக்கையை வெளிடலாம்ன்னு பேசிகிட்டாங்களாம் கோ….’’ என தனது தகவலை முடித்தார் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.
‘‘தேர்தல் பிரசாரத்துக்காக பேரம் பேசுறாங்களாம் பா…’’ என மேட்டரை ஆரம்பித்தார் போலீஸ் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘அது யாரு வே…’’ என ஆர்வமாக கேட்டார் இசக்கி முத்தன்.
‘‘சட்டசபை தேர்தலையொட்டி திரையுலக நட்சத்திரங்களை இழுகிக்கிற முயற்சியில அரசியல் கட்சிகள் இறங்கி இருக்கு…  குறிப்பா தேசிய கட்சியான பா.ஜ.க. நடிகர், நடிகைகளை இழுக்குறதுல ஆர்வம் காட்டினாங்க, இன்னும் கூட அந்த முயற்சியில அவங்க தீவிரமாதான் இருக்காங்களாம் பா…
‘‘இந்த நிலையிலதான் நடிகர் விஜயகுமார், எஸ்.வி.சேகர், விசு, கங்கை அமரன், காயத்ரி ரகுராம்ன்னு வரிசையா பா.ஜ.க.வில் சேர்ந்தாங்க…  இவங்களை வைத்து திராவிட கட்சிகளுக்கும், காங்கிரசுக்கும் எதிரா பிரச்சாரம் செய்து அசத்திடலாம்ன்னு  பா.ஜ.க. தலைவர்கள் நினைச்சாங்களாம் பா…
‘‘ஆனா இவங்களோ சினிமா தயாரிப்பாளரிடம் ‘கால் ஷீட்டு’ கேட்பாங்களோ அதேபோல் கட்சி நிர்வாகிகளிடமும் எதிர்பார்த்தாங்களாம்… குறிப்பா பிரசார இடம் அல்லது பொதுக்கூட்ட மேடைக்கு வர்றதுக்கு ஏ.சி.கார் மற்றும் மேடையில் பேச கணிசமான தொகைன்னு கேட்டாங்களாம்…
‘‘இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க தலைவர்கள் ‘மத்த கட்சி எப்படியோ, பா.ஜ.க.வுக்கு நீங்கதான் செலவு செய்துதான் பிரசாரம் செய்யனும்ன்னு’ சொல்லி இருக்காங்க…  இதனால பா.ஜ.க.வோட பிரசாரம் மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வர நடிகர், நடிகைகள் தயங்குறாங்களாம் பா…’’ என்று பிரஸ் கிளப் விவாதத்தை முடித்து வைத்தார், போலீஸ் நிருபர் ‘டெரர்’ டேவிட்.

Leave a Reply