- அரசியல் செய்திகள்

பிப். 25 முதல் பிப். 27 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் அறிவிப்பு

பிப்ரவரி 25 முதல் 27 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், பிப்ரவரி 27 ஆம் தேதி பட்ஜெட் விவாதத்திற்கான பதிலுரையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், உத்தரகண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply