- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

பின்னணி பாடகிக்கு நடிகர் விஷால் உதவி

சென்னை, மார்ச்-30

ரத்தக்கண்ணீர், தூக்குமேடை, பேசும் தெய்வம் உள்பட பல படங்களில் பின்னணி பாடியவர் சரளா. தற்போது முதுமைக்காலத்தில் வறுமையில் சரளா தவிப்பதாக நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பாடகி சரளாவுக்கு தனது  `தேவி அறக்கட்டளை' மூலம் மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். அதோடு தற்போது நோய்வாய்ப்பட்டிருக்கும் சரளாவின் மருத்துவ தேவைக்கும் உடனடியாக ஏற்பாடு செய்திருக்கிறார்.

Leave a Reply