- கடலூர், செய்திகள், மாவட்டச்செய்திகள்

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை

கடலூர், மார்ச் 28:-
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் பேச்சு
கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் மற்றும் கடலூர் முதுநகர் ஆகிய பகுதிகளில் பா.ம.க. சார்பில்   பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. பொதுகூட்டங்களுக்கு மாநில துணைத்தலைவர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க. என மாறி மாறி ஆட்சி செய்து மக்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. மக்களின் உயிர்நாடியான விவசாயத் தொழில் நலிவடைந்து வருகிறது.
குடும்பத்தில் ஒருவருக்கு வேலை
இதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை. வரும்  சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, அனைத்து மக்களுக்கும் சோறு போடும் விவசாயத்திற்கு (இலவச தரமான விதைகள், பூச்சிமருந்துகள், பஞ்சாயத்துக்கு ஒரு டிராக்டர்) முன்னுரிமை அளித்து லாபகரமான தொழிலாக மாற்றப்படும். அம்பானி பிள்ளைகளுக்கு  கிடைக்கும் படிப்பை பாமர மக்களுக்கும் கிடைக்க  வழிவகை செய்யப்படும். ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கப்படும். இவைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் செய்ய முடியவில்லை என்றால் ஆட்சியிலிருந்து விலகுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply