- செய்திகள், மாநிலச்செய்திகள்

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ‘ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில்தான் அசாம் அரசு செயல்படும்’ ராகுல் காந்தி பேச்சு

திபு, மார்ச் 30:-

அசாம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து அல்லது பிரதமர் அலுவலகத்தில் இருந்துதான் மாநில அரசு செயல்படும் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டிப் பேசினார்.
தேர்தல் பிரசாரம்
அசாம் மாநிலம் கர்பி மாவட்டத்தில் உள்ள திபு பகுதியில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் ஒவ்வொருவரும் தங்களுடைய கலாசாரம், மொழி ஆகியவற்றை பாதுகாக்க சிந்திக்க வேண்டும், செயல்படட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாட்டில் எவரும் அடக்குமுறைக்கு ஆளாகக்கூடாது.

நாக்பூரில் இருந்து செயல்படும்
அசாம் மாநிலத்தில் பா.ஜனதா என்ன செய்ய விரும்புகிறது? முதலில் அவர்கள் உங்களிடம் வாக்குகளை கேட்பார்கள். பின்னர் அசாம் மாநில அரசு இங்கிருந்து செயல்படாது. நாக்பூர் (ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் இருக்கும் இடம்) அல்லது பிரதமர் அலுவலகத்தில் இருந்துதான் செயல்படும்.

எங்ெகல்லாம் பா.ஜனதா போகிறதோ, அங்கெல்லாம் மக்களை ஒருவருக்கொருவர் மோத வைக்கவே முயற்சிக்கிறது.  எடுத்துக்காட்டாக அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் அமைதி நிலவியது. எந்த வன்முறையும் நடைபெறவில்லை.

ஆனால், பா.ஜனதா ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அங்கே வன்முறை வெடித்தது. ஜாட் மற்றும் பிற சமூகத்தினர் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

வன்முறையை பரப்ப முயற்சி
குஜராத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்து விட்டீர்கள். பீகாரில் தேர்தலுக்கு முன்பு வன்முறையை ஏற்படுத்த அவர்கள் முயற்சி ெசய்தார்கள். அசாமிலும் வன்முறையை தூண்டுவதற்கு அவர்கள் முயற்சி செய்து ெகாண்டிருக்கிறார்கள்.

அவர்கள் உங்களைப் பற்றியோ அல்லது அசாம் மாநிலத்தைப் பற்றியோ சிந்திக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சொல்வதைப் போன்று நாடு முழுமைக்கும் ஒரே சித்தாந்தத்தை ஒரே சிந்தனையை  திணிப்பதற்கே அவர்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
—————–

Leave a Reply