- செய்திகள்

பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்பாட்டம் கொள்முதல் விலையை உயர்த்தகோரி…

மதுராந்தகம், ஜூலை.29-
மதுராந்தகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தகோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில்  ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆவின் கொள்முதல்
ஆர்பாட்டத்தின்போது பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கின்ற பால் முழுவதையும் “ஆவின்” நிறுவனம் தடையின்றி கொள்முதல் செய்திடவும், கொள்முதல் செய்கின்ற பசும்பால் லிட்டருக்கு 35 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 40 ரூபாய் வழங்கிட வேண்டும்.
இறக்குமதிக்கு தடை
பால் உற்பத்தியாளர்களுக்கு நபார்டு திட்டத்தில் கறவை மாட்டுக்கடன், இலவசக் கறவை கூடம் அமைத்தல் போன்ற சலுகைகளை வழங்கிடவும், குழந்தைகள் சத்துணவுத்திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்கிடவும், பால் பொருட்களின் இறக்குமதியை தடைசெய்திட வேண்டும்.
பால் குளிரூட்டும் நிலையம்
ஆவின் நிறுவன பால் விற்பனையை அதிகரிக்க வேண்டும், காலம் தவறாமல் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடவும், மதுராந்தகம் அடுத்த பவுஞ்சூரில் 5000-லிட்டர் கொள்ளளவு உள்ள பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும். சானூர் பால் குளிரூட்டும் நிலையத்தில் தங்குதடையின்றி பாலை கொள்முதல் செய்யவும், ஆவின் ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை வைத்து ஆர்பாட்டம் செய்தனர்.
இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் ரவி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுசெயலாளர் முகமதுஅலி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர்.

Leave a Reply