- செய்திகள்

பாலாற்று தடுப்பணையில் குதித்து உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கவேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை…

சென்னை, ஜூலை. 30-
பாலாற்றில் குதித்து உயிரிழந்த விவசாயி சீனுவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று, டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
இது தொடர்பாக, பா.ம.க.இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அதிர்ச்சி
பாலாற்றின் குறுக்கே தமிழக – ஆந்திர எல்லையில் புல்லூர் என்ற இடத்தில் உயரம் அதிகரிக்கப்பட்ட  தடுப்பணையில் குதித்து விவசாயி சீனு என்பவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து  வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த  இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சீனு என்ற விவசாயி நேற்று மாலை புல்லூர் தடுப்பணைக்கு சென்றார். 16 அடி உயரத்திற்கு அணையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், தண்ணீரை வணங்கியபடியே தடுப்பணைக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தநிகழ்வு அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.25 லட்சம்
தமிழக அரசு, பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் உயரம் அதிகரிக்கப்படுவதையும், துணை ஆறுகளின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படுவதை  தடுக்கவும், உயரம் அதிகரிக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை பழைய அளவுக்கு குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயி சீனுவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

Leave a Reply