- செய்திகள், விளையாட்டு

பார்சிலோனாவுக்கு அதிர்ச்சித் தோல்வி

மாட்ரிட், ஏப். 11:-

ஸ்பானிஷ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்தது ரியல் சோசிடாட் அணி.
மாட்ரிட் நகரில் சனிக்கிழமை இரவு இந்த ஆட்டம் நடந்தது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணியினரும் கோல்  முயற்சியில் பரபரப்பாக இருந்தனர்.  முந்திக்கொண்ட ரியல் சோசிடாட் அணியின் இளம் வீரர் மிகேல் ஓயார்ஜாபல்  5-வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.

லியானோல் மெஸ்ஸி, செர்ஜி, துரன், நெய்மர், எல்ஹதாதி, பிகு உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இருந்தும் ஒரு  கோல்கூட அடிக்கமுடியவில்லை. 2-பாதியிலும் இவர்களின் முயற்சியை ரியல் சோசிடாட் அணி வீரர்கள் முறியடித்தனர். இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது ரியல் சோசிடாட் அணி.

இந்த முறையாவது நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி தனது 500-வது கோலை அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர், கடைசியில் அது பொய்த்துப் போனது.

பார்சிலோனா கடைசியாக தான் மோதிய 6 ஆட்டங்களில் 5-ல் தோல்வியும், ஒரு போட்டியை சமன் செய்துள்ளது. பட்டியலில் 76 புள்ளிகளுடன் முதலிடத்தில் பார்சிலோனா அணி இருந்தபோதிலும், அதை முறியடிக்கும் முயற்சியில் ரியல் மாட்ரிட் அணியும், அட்லெட்டிகோ மாட்ரிட் அணியும் தீவிரமாக இருக்கின்றன. பார்சிலோனா அணியைக் காட்டிலும் 3 புள்ளிகள் மட்டுமே குறைவாக அட்லெட்டிகோ மாட்ரிட் அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் இபார் அணியை 0-4 என்ற கோல் கணக்கில் துரத்தியது ரியல் மாட்ரிட். மேலும், எஸ்பேன்யோல் அணியை எதிர்த்து ஆடிய மற்றொரு ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அட்லெட்டிகோ மாட்ரிட் அணி.

Leave a Reply