- உலகச்செய்திகள், செய்திகள்

‘பாரதமாதா வாழ்க கோஷ’ சர்ச்சை கருத்து பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஆசம்கான் வலியுறுத்தல்

லக்னோ, ஏப்.6-

‘பாரத மாதா வாழ்க’ கோஷம் தொடர்பாக கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக, யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஆசம்கான் வலியுறுத்தினார்.

‘‘பாரத மாதா வாழ்க’’ கோஷத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும், நாடு தழுவிய விவாதம் நடைபெற்று வருகிறது.

தலை துண்டிப்பு கருத்து

இந்த நிலையில், நேற்று முன்தினம் அரியானா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாபா ராம் தேவ், ‘பாரத மாதா வாழ்க’ கோஷம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

அப்போது அவர், ‘‘இந்த நாட்டின் சட்டத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் நான் மதிக்கிறேன். இல்லையென்றால் ‘பாரத மாதா வாழ்க’ கோஷம் எழுப்பாதவர்கள், அவர்கள் எத்தனை லட்சம் பேராக இருந்தாலும் அவர்களின் தலையை சீவி இருப்பேன்’’ என்று கூறினார்.

உ.பி. அமைச்சர் ஆசம்கான்

ராம்தேவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உத்தரப்பிரதேச மாநில சமாஜ்வாடி கட்சி அரசில் மூத்த அமைச்சராக பதவி வகித்துவருபவர், ஆசம்கான்.

அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவரும் ஆசம்கான், தலை துண்டிப்பு கருத்துக்காக ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்கள் உடையில்….

தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவர் ெவளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து கூறி இருப்பதாவது-

‘‘ராம் தேவ், ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவருடைய தொழிலை மட்டும் ராம்தேவ் பார்த்தால் போதும்.

டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக,  பெண்கள் அணியும் உடைகளை அணிந்து கொண்டு மாறுவேடத்தில் ஓடிய ஒருவர் (ராம்தேவ்,) ‘எதிர்ப்பு குரல்’ கொடுப்பவர்களின் தலையை துண்டிப்பேன் என்று எப்படி பேச முடியும்?.

பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் திட்டப்படி, நாட்டில் நிலவும் இணக்கமான சூழ்நிலையை கெடுப்பதில் ராம்தேவ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்’’.

இவ்வாறு ஆசம்கான் கூறி இருக்கிறார்.

———

Leave a Reply