- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

பாடியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

அம்பத்தூர், ஏப். 5:-

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்பத்தூர் அடுத்த பாடியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழிப்புணர்வு பேரணியை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன், தேர்தல் துணை வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
பாடி சிவன் கோவிலில் துவங்கிய பேரணி தெற்கு மாட வீதி,யாதவாள் தெரு, ராஜா தெரு, எம்.டி.எச். சாலை, மசூதி தெரு வழியாக சென்று சர்ச் சாலையில் முடிவடைந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு பேரணியில் பங்கேற்றனர்.
நிகழ்சியில் உதவி வருவாய் அலுவலர்கள் பாஸ்கரன், சுரேஷ்குமார், மண்டல கண்கானிப்பாளர் குணசேகரன், துப்புரவு அலுவலர் தங்கராஜ், துப்புரவு மேற்பார்வையாளர் கருணாகரன், சுகாதார ஆய்வாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் சேட்டு, உதவி பொறியாளர் கோதண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply