- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

பாகிஸ்தான்-வங்கதேசம் இன்று மோதல் ஆசிய கோப்பை கிரிக்கெட்

மிர்பூர், மார்ச் 2:-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்-வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.

வங்கதேசத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை சந்திக்கிறது.

வங்கதேச அணியில் துவக்க ஆட்டக்காரர் தமிம் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

இந்தப் போட்டியை பொருத்தவரை வங்கதேசம் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுமே இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆக இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது திண்ணம்.

Leave a Reply