- செய்திகள், விளையாட்டு

பாகிஸ்தான் பங்கேற்பது உறுதி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

கராச்சி, பிப்.25:-

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்த நாடு அனுமதியளித்துள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் மார்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது, இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷகார்யார் கான், பாகிஸ்தான் அரசு தங்கள் நாட்டு அணி பாகிஸ்தானில் விளையாட அனுமதி அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் தங்கள் நாட்டு அணிக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி 20 ஓவர் உலக கோப்பையில் மார்ச் 19-ம் தேதி தர்மசாலாவில் இந்தியாவுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியைக் காண நூற்றுக் கணக்கான ரசிகர்கள் இந்தியா வருவார்கள் என்றும் அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் விசா உள்ளிட்ட வசதிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செய்து தருமாறும் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply