- செய்திகள், விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ராஜினாமா

லாகூர், ஏப்.5-
பாகிஸ்தான் கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் பதவியை வக்கார் யூனிஸ் நேற்று ராஜினாமா செய்தார்.
லாகூரில் நிருபர்களை சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:-
ராஜினாமா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நான் வகித்து வந்த பதவியை இன்று (அதாவது நேற்று) ராஜினாமா செய்து விட்டேன். இந்த முடிவை மிகுந்த கனத்த இதயத்துடன் எடுத்து உள்ளேன். இதனை நான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கும் தெரிவித்து விட்டேன்.
கடந்த உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் அணியால் சரியாக செயல்பட முடியவில்லை. தொடர்ந்து தோல்விகளை தான் சந்தித்து உள்ளது. அணியை தோல்வி பாதையில் இருந்து மீட்க நான் பல்வேறு பரிந்துரைகளை கொடுத்தேன். ஆனால் அவர்கள் நிராகரித்து விட்டனர்.
படுதோல்வி

இதனால் பாகிஸ்தான் அணியால் குறிப்பிட தகுந்த வெற்றியை பெற்று முன்னோக்கி செல்ல முடியவில்லை. இவ்வாறு வக்கார் யூனிஸ் கூறினார். வக்கார் யூனிஸ் கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அவரின் பயிற்சியின் கீழ் தான் பாகிஸ்தான் அணி இந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் களம் கண்டது. அந்த அணியால் வங்காள தேசத்தை தவிர வேறு எந்த அணியையும் ெவற்றி பெற முடியவில்லை. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவியது.
3 மாதத்துக்கு முன்னரே..

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷாகித் அப்ரடி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிசுக்கு இன்னும் 3 மாதம் பதவிக்காலம் உள்ளது. ஆனால் அவர் ஒப்பந்த காலம் முடியும் முன்னரே தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
பாகிஸ்தான் அணி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து சென்று விளையாட உள்ளது. அதற்குள் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
———–

Leave a Reply