- செய்திகள், விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் ஸ்டுவர்ட் லா

கராச்சி, மே 5:-

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் லா நியமிக்கப்பட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாகூரில் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்கள் கூட்டத்தில், அனைத்து உறுப்பினர்களும் ஸ்டூவர்ட் லா தலைமைபயிற்சியாளராக நியமிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், இவர் நியமிக்கப்படாத பட்சத்தில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவின் ஆன்டி மோல்ஸ் நியமிக்கவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஸ்டூவர்ட் லா தற்போது, ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக, ஜூலை-ஆகஸ்ட் மாதம் இலங்கைப் பயணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து, எசக்ஸ், லான்காசையர் அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வௌியிடும் எனத் தெரிகிறது.

Leave a Reply